தீர்ப்பை எதிர்த்து அப்பீல்? விஜய் வழக்கறிஞர் தகவல்!

வெள்ளி, 16 ஜூலை 2021 (07:06 IST)
விஜய் வரி வழக்கு குறித்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய உள்ளதாக அவரது வழக்கறிஞர் எஸ்.குமரேசன் என்பவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
வரி கட்ட கூடாது என்ற நோக்கம் இந்த வழக்கில் துளியும் இல்லை. வரிவிதிப்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பும் அரசின் அணுகுமுறையும் முரண்பட்ட இருந்ததால் இந்த வழக்கு தொடரப்பட்டது. அப்போதே நுழைவு வரி கட்டித்தான் ஆகவேண்டும் என்று உத்தரவு இருந்திருந்தால் எந்த ஆட்சேபனையும் இன்றி விஜய் அவர்கள் வரி கட்டி இருப்பார்
 
சமூகத்தில் தனக்குரிய செல்வாக்கை பயன்படுத்தி வரி விதிப்பில் இருந்து யாரும் விலகி ஓட வெளியேற முடியாது, அது விஜய் அவர்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் இப்போது நீதிபதி ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்து அபராதம் விதித்துள்ளார். தீர்ப்பில் எங்களுக்கு இருக்கும் ஆட்சேபனைக்குரிய பகுதிகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்.
 
இந்த மேல்முறையீடு கூட வரி கட்ட கூடாது என்பதற்காகவோ அல்லது அபராதம் செலுத்த கூடாது என்பதற்காகவும் கிடையாது. ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை எதிர்த்து மேல்முறையீடு. இவ்வளவு காரசாரமான தமது கருத்துக்களை தெரிவிக்க கூடாது என்பதுதான் எங்கள் வாதம். அதனை சட்டப்படி எதிர்கொள்வோம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்