இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய பிரமுகரான ஆதவ் அர்ஜுனா பேசும் போது, "இனிமேல் விஜய்க்கு தளபதி என்ற பட்டம் தேவையில்லை. அதற்கு பதிலாக 'வெற்றி தலைவர்' என்ற பட்டத்தை வழங்குகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
"இதுவரை நாம் நமது தலைவரை 'தளபதி' என்று அழைத்தோம். இனிமேல் அந்த பட்டம் அவருக்கு தேவையில்லை. அதற்குப் பதிலாக 'வெற்றி தலைவர்' என்று ஒரே குரலுடன் அவரை அழைப்போம்" என்று அவர் பொதுக்குழு கூட்டத்தில் முன்மொழிந்தார். இதை ஏற்றுக்கொள்ள விரும்புவோர் கையை தூக்கலாம் என்று கூறியதும், அனைவரும் கையை தூக்கினர்.
அதை உணர்ந்த விஜய், அனைவருக்கும் வணக்கம் செலுத்தி 'வெற்றி தலைவர்' என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டார். எனவே, இனிமேல் 'தளபதி விஜய்' என்பதற்குப் பதிலாக, 'வெற்றி தலைவர் விஜய்' என்றுதான் தமிழக வெற்றிக்கழகத்தின் தொண்டர்கள் அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.