திமுக ஆட்சிக்கு வந்ததும் வன்னியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு – வேல்முருகன் உறுதி!

செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (10:26 IST)
தேர்தல் சமயத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை கையில் எடுத்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் 20 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுக அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதே போல தமிழகம் முழுவதும் மனுக்கொடுத்தல் மற்றும் போராட்டங்களை பாமகவினர் நடத்தி வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சியின் இது ராமதாஸின் தேர்தலுக்கான சீட் வாங்கும் உத்தி என விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ‘திமுக ஆட்சிக்கு வந்ததும் வன்னியர்களுக்கான 15 சதவீதம் இடஒதுக்கீட்டை பெற்று தருவதே என் முதல் வேலை. திமுகவின் தேர்தல் அறிக்கையில் இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்