இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து கூறிய போது ஊழலில் திளைத்த கட்சி திமுக என்று உலகத்திற்கே தெரியும், திமுகவுக்கு எதிராக ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக என்றும் திமுகவினர் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டது நல்ல விஷயம் என்றும் தெரிவித்தார்.
மேலும் அதிமுகவின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிடுவேன் என்று சொல்லவில்லை, அவ்வாறு சொல்லியிருந்தாலும் எங்களுக்கு மடியில் கனமில்லை, அதிமுகவின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிடட்டும், அதன் பிறகு எங்கள் ரியாக்சன் எப்படி என்பதை நீங்கள் பார்ப்பீர்கள் என்று தெரிவித்தார்.