ஓபிஎஸ் பாதுகாப்பு நீக்கம் குறித்து வைரமுத்துவின் ஆவேசமான டுவீட்

வெள்ளி, 10 ஜனவரி 2020 (12:33 IST)
தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, 'இசட் பிளஸ்' பாதுகாப்பு, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு 'ஒய் பிளஸ்' எனப்படும் துணை ராணுவ கமாண்டோ படை பாதுகாப்பு வழங்கி வந்த நிலையில் நிலையில் தற்போது இந்த இரண்டுவித பாதுகாப்பையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது
 
மத்திய அரசின் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டாலும் இருவருக்கும் தமிழக போலீசார் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கும் வரை, துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் முக ஸ்டாலின் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டது குறித்து அவரது கூட்டணி கட்சியினர் மற்றும் திமுகவினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் திமுகவின் அனுதாபியான பாடலாசிரியர் வைரமுத்து இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது:
 
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருந்த உச்சகட்டப் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது கவலையளிக்கிறது. ஒரு சமூகப் போராளிக்குச் சரியான பாதுகாப்பு வேண்டாமா? துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் பாதுகாப்பு நீக்கப்பட்டதற்கும் இதே கவலையை நீட்டிக்கிறேன்; கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்