சந்திர கிரகணம்; பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள் எது தெரியுமா.....?

சந்திரன் - பூமி - சூரியன் ஆகிய கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் உண்டாகின்றது. சந்திரன் - சூரியன் இடையே  பூமி வரும் போது, சூரியனின் ஒளி பூமியால் மறைக்கப்படும் போது சந்திர கிரகணம் உண்டாகின்றது.
சந்திர கிரகண வகை: முழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம், தெளிவற்ற சந்திர கிரகணம் என மூன்று வகைகள் உள்ளன. இந்த சந்திர கிரகணம் தெளிவற்ற சந்திர கிரகணமாகத் தெரிய உள்ளது.
 
இந்தியாவில் இந்த சந்திர கிரகணம் ஜனவரி 10ஆம் தேதி (இன்று) இரவு 10.30 மணி முதல் ஜனவரி 11 (நாளை) அதிகாலை 2.42 வரை நீடிக்கும். இந்த சந்திர  கிரகணத்தில் சந்திரன் 90 சதவீதம் பூமியின் நிழலால் மறைக்கப்படும். இருப்பினும் இது ஒரு மங்கலான கிரகணமாகத் தோன்றும். இந்த  கிரகணத்தை நாம் வெறும் கண்களால் பார்க்கலாம்.
 
பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்: புனர் பூசம் (மிதுனம், கடகம்), திருவாதிரை (மிதுனம்), பூசம் (மிதுனம்), விசாகம் (துலாம், விருச்சிகம்), பூரட்டாதி (மீனம்) ஆகிய 5  நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மட்டும் பரிகாரம் செய்தால் போதும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்