இடியின் குரல், மின்னலின் வேகம், தீயின் தீவிரம், புயலின் உரையாடல்.. இனி எப்போது கேட்ப்போம் - வைரமுத்து ’டுவீட்’
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 24ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக பொது செயலாளரும், மூத்த தலைவருமான க.அன்பழகன் நேற்று இரவு காலமானார். க.அன்பழகனின் மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.
இடியின் குரல், மின்னலின் வேகம், தீயின் தீவிரம், புயலின் உரையாடல் அனைத்தும்கொண்ட பெரும் பேச்சாளர் #பேராசிரியர் பேசுவதை நிறுத்திக்கொண்டார். இனி எப்போது கேட்போம் அந்த இனமானத் தமிழை? என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.