சென்னை விமான நிலையம் செல்வதற்காக தனது மனைவியுடன் மெட்ரோ ரயிலில் பயணித்த சென்ற வைகோ, மீனம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலயத்தில் உள்ள லிஃப்டில் ஏறினார். அப்போது அங்கு வந்த இரு இளைஞர்கள் லிஃப்டில் ஏறினர், தாங்கள் அவசரமாக செல்ல வேண்டும் என கூறினார்.
இதனை அந்த இளைஞர்கள் கண்ணீர் மல்க வைகோவிடம் முறையிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த வைகோ, ஆதரவாளர் ஒருவர் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். வேறு யாரெல்லாம் அந்த இளைஞர்களை தாக்கினார்கள் என ஆக்ரோஷத்துடன் கேட்டார். பின்னர் அந்த இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்ட வைகோ அங்கிருந்து சென்றார். இதனால் அங்கு சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.