சமீபத்தில் அவருக்கும், சீமான் தரப்புக்கும் ஒரு மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலரும் வைகோ தரக்குறைவாக விமர்சித்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை பதிவு செய்து வந்தனர். காவிரி விவகாரம் மற்றும் வைகோவை பற்றிய அவதூறு மீம்ஸ்களை கண்ட வைகோவின் உறவினர் சரவண சுரேஷ் மனமுடைந்து தீக்குளித்தார்.
அந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய வைகோ ““என்னைப் பற்றி சீமான் தரப்பினர் போட்ட மீம்ஸ்களால் எனது குடும்பம் மிகவும் நொறுங்கிப் போயுள்ளது. சுரேஷ் உயிர் பிழைப்பது கடினமே. என் குடும்பத்தில் யாரேனும் உயிர் துறந்தார்களா எனக் கேட்டனர். இப்போது சுரேஷ் அதை செய்துவிட்டேன். இனிமேல், தவறான மீம்ஸ்களை பதிவிட்டு காயப்படுத்த வேண்டாம்” என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.