நக்கீரன் ஆசிரியர் கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அதேபோல், அவரை சந்திக்க சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்ற வைகோவை போலீசார் தடுத்தி நிறுத்தினர். ஒரு வழக்கறிஞராக அவரை சந்திக்க வந்துள்ளேன். என்னை தடுப்பதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை என வைகோ கூறியும், கோபாலை சந்திக்க போலீசார் அனுமதிக்கவில்லை.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ “காவல்துறையையும், நீதித்துறையையும் கேவலமாக விமர்சித்த ஹெச்.ராஜாவை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து ஆளுநர் பன்வாரிலால் விருந்து கொடுக்கிறார். ஆனால், நக்கீரன் கோபால் மீது புகார் கொடுத்து கைது செய்ய வைத்துள்ளார். ஆளுநரின் கைப்பாவையாக காவல் துறை மாறிவிட்டது. இது பத்திரிக்கை சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல். எனவே, ஊடகங்களும், பத்திரிக்கையாளர்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்” எனக்கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.