2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் திமுக வெற்றி பெறும் என்றும், மு.க. ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்றும், நடிகர் வடிவேலு பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் சொன்னதையும் செய்கிறார், சொல்லாததையும் செய்கிறார். சொன்னதில் இன்னும் பத்து சதவீதம் தான் இருக்கு, சொல்லாதது எக்கச்சக்கமாக இருக்கிறது. உண்மையிலேயே நமக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் நமது முதல்வர். அவர் நீடூடி பல்லாண்டு வாழ வேண்டும்," என்று அவர் வாழ்த்து தெரிவித்தார்.
ஏற்கனவே, கடந்த 2011 ஆம் ஆண்டு திமுகவுக்கு ஆதரவாக வடிவேலு தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்திருந்தார். அந்த தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததால், அதன் பிறகு பத்து ஆண்டுகள் அவரால் சினிமாவில் நடிக்க முடியாத நிலை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.