கொரோனா இருக்குமோ? மூலிகையை சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

திங்கள், 23 மார்ச் 2020 (13:11 IST)
மதுரையில் கொரோனா இருப்பதாக சந்தேகித்து மூலிகை மருந்து சாப்பிட்ட குடும்பம் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிகப்பட்டுள்ளனர். பல்வேறு நாடுகளும் இந்த வைரஸை குணப்படுத்த மருந்து தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் கொரோனா குறித்த வீண் வதந்திகளும், போலி மருந்துகளும் தொடர்ந்து மக்களிடையே பரப்பப்பட்டு வருகின்றன.

மதிரை உசிலம்பட்டி அருகே கொரோனா சந்தேகத்தின் பேரில் மூலிகை மருந்தை உட்கொண்ட தாய் மற்றும் மகன்கள் ஆகிய 3 பேர் வாந்தியெடுத்து மயக்கமடைந்துள்ளனர். இதனால் உடனடியாக அருகில் உள்ள உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால் அரசு மருத்துவமனைகளை அணுகலாம். அதை தவிர்த்து இதுபோன்று சுயமாக மருந்து எடுத்து கொள்வது ஆபத்தை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்