நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி அறிவிப்பு!

வியாழன், 2 டிசம்பர் 2021 (08:59 IST)
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
அனைத்து மாநகராட்சிகளிலும் உள்ள மேயர் தேர்தல் உள்பட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையமும் தயாராகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் முதல் படியாக தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக சீரமைக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது
 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழக மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்