ஜெயிலர் குடும்பத்துடன் தீ வைத்துக் கொளுத்த முயற்சி: கூலிப்படையினர் சதி என தகவல்

ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (10:12 IST)
கடலூரைச் சேர்ந்த ஜெயிலர் ஒருவரின் குடும்பத்தோடு தீ வைத்து கொளுத்த கூலிப்படையினர் முயற்சி செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கடலூரில் உள்ள மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன். இவர் சிறை கைதி தனசேகரன் என்பவரின் செல்போனை பறிமுதல் செய்ததால் ஆத்திரமடைந்த அவர் கூலிப்படை மூலம் கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது
 
அவர் ஏவி விட்ட கூலிப்படையினர் மணிகண்டன் குடும்பத்துடன் தீ வைத்து கொளுத்த முயற்சி செய்ததாகவும் அதில் மணிகண்டனும் அவருடைய குடும்பத்தினர் நூலிழையில் தப்பி விட்டதாகவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது 
இதனை அடுத்து சிறைக்கைதி எண்ணூர் தனசேகரனை போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் கூலிப்படையினரை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்