பல்கலை.க்கு மாநில அரசே துணைவேந்தரை நியமிக்க அதிகாரம்: மசோதா இன்று தாக்கல்
வியாழன், 5 மே 2022 (09:58 IST)
அம்பேத்கார் சட்டப் பல்கலைக் கழகத்திற்கு மாநில அரசே துணைவேந்தரை நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இந்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார். அதன்பின் இந்த மசோதா மீது விவாதம் நடந்து வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் மாநில அரசு நியமிக்கும் அதிகாரம் வேண்டும் என்று ஏற்கனவே திமுக உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இருப்பினும் இன்று இயற்றப்படும் இந்த மசோதாவை அமல்படுத்தும் அதிகாரம் கவர்னர் கையில்தான் உள்ளது என்பதால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்