இதற்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுக என்பது கட்சி இல்லை அது ஒரு கம்பெனி. திமுகவில் நடப்பது குடும்ப ஆட்சி முதலில் கருணாநிதி, அடுத்து ஸ்டாலின் அவருக்கு அடுத்து உதயநிதி ஸ்டாலின் தற்போது தலைதூக்க துவங்கிவிட்டார் என விமர்சித்தார்.
இதற்கு டிவிட்டர் ஏற்கனவே, சுயமரியாதை இழந்த அடிவருடிகளுக்கும், முதுகெலும்பில்லாத அடிமைகளுக்கும் எங்கள் இயக்கத்தை பற்றி பேச துளிகூட தகுதி இல்லை என்று காட்டமாக உதயநிதி பதிலடி கொடுத்திருந்தார்.
இருப்பினும் தற்போது கோவை கண்டன கூட்டத்தில் மீண்டும் பதில் அளித்துள்ளார். அதில் உதயநிதி கூறியது, தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. எல்லா அமைச்சர்களுமே ஊழல் புரிகின்றனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக வரும்.
ஆமாம்... நான் வரிசையில்தான் நிற்கிறேன். ஆனால் கட்சி தலைமை பதவிக்கோ, எந்த உயர்ந்த பதவிக்கோ வரிசையில் நிற்க மாட்டேன். எப்போதும் திமுகவின் தீவிர தொண்டனாக நின்று தோள் கொடுக்கவே அரசியலுக்கு வந்துள்ளேன் என பேசினார்.