சிந்தாதிரிப்பேட்டை ‘லைஃப்லைன் ப்ராஜெக்ட்’ திட்டம்: உதயநிதி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (22:17 IST)
சிந்தாதிரிப்பேட்டை ‘லைஃப்லைன் ப்ராஜெக்ட்’ திட்டம்: உதயநிதி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

சிந்தாதிரிப்பேட்டையில் லைப்லைன் ப்ராஜெக்ட் என்ற திட்டத்தை அந்த தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார் இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது

 
சிந்தாதிரிப்பேட்டை பம்பிங் ஸ்டேஷன் குடிசை பகுதியினர் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அரசு அலுவலர்-தன்னார்வ தொண்டு நிறுவன உதவியுடன் மக்களையும் இணைத்துக்கொண்டு செயல்படுத்தப்படும் ‘லைஃப்லைன் ப்ராஜெக்ட்’ என்ற திட்டத்தை இன்று தொடங்கினோம். அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தேன்
 
 
சிந்தாதிரிப்பேட்டை பம்பிங் ஸ்டேஷன் பகுதி ‘அம்பேத்கர்-பெரியார் குடிசை வாழ்வோர் நல உரிமை சங்கம்’ கட்டிடத்தை புதுப்பித்து தந்து, அதன் தலைவர் அண்ணன் பிரபாகரன் அவர்கள் மூலம் இன்று திறந்துவைத்தோம். மகளிருக்கு சம உரிமை தந்து சமூகநீதி காத்து அடிமை தனத்தை வேரறுப்போம் என வலியுறுத்தினேன்.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்