அவர் கூறியதாவது, மோடியின் பாசிச ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடியவர் ஸ்டாலின் மட்டும்தான். இங்குள்ள முதல்வரும், துணை முதல்வரும் யார் மிகச்சிறந்த அடிமை என பார்க்கலாம் என்று போட்டி போட்டிக்கொண்டு ஜால்ரா அடிக்கின்றனர்.
வெற்றிநடை போடும் தமிழகம் என விளம்பரம் கொடுக்கிறார்கள். ஆனால், காஸ் விலை, பெட்ரோல் விலையை குறைக்க வக்கில்லாமல் மோடி ஆட்சிக்கு ஜால்ரா அடித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.