நடிப்பு, தயாரிப்பு என்றிருந்த உதயநிதி அரசியலிலும் ஆர்வம் காட்டி வந்ததால் கடந்த கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றார். இதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் சிறந்த பணியையாற்றி தன் மீது விழுந்த விமர்சனங்களுக்கு செயல் மூலம் பதில் அளித்தார்.
இந்நிலையில், இளைஞர் அணியை போன்று இளம் பெண்கள் பேரவையும் தொடங்க திட்டமிட்டு அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வந்தார். தற்போது இந்த பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இளம் பெண்கள் பேரவையை அறிமுகப்படுத்த உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.