நெல்லை செல்லும் வழியில் விருதுநகர் கலெக்டரை சந்தித்த உதயநிதி.. மக்களை காக்க அறிவுரை..!

திங்கள், 18 டிசம்பர் 2023 (15:19 IST)
திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில்  மீட்பு நடவடிக்கைக்காக கூடுதலாக நான்கு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பதை பார்த்தோம்.
 
அவர்களில் ஒருவரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருநெல்வேலி நோக்கி விரைந்து கொண்டிருக்கும் நிலையில் நெல்லை செல்லும் வழியில் அவர் விருதுநகர் மாவட்ட கலெக்டரை சந்தித்து, அந்த பகுதி மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கனமழை - வெள்ளப் பாதிப்புகளை அடுத்து, அங்கு மீட்பு - நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக செல்லும் வழியில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து, அங்குள்ள மழை நிலவரம் குறித்து கேட்டறிந்தேன்.
 
“விருதுநகர் மாவட்டத்திலும் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து வகையிலும் முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்திட கேட்டுக்கொண்டேன்’ என பதிவு செய்துள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்