1931ம் ஆண்டுக்குப் பிறகு அதிகமழை.. பாளையங்கோட்டை கனமழை குறித்து பாலச்சந்திரன்

திங்கள், 18 டிசம்பர் 2023 (14:19 IST)
1931ம் ஆண்டுக்குப் பிறகு பாளையங்கோட்டை பகுதியில் அதிகமழை பதிவாகியுள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
 
கடந்த இரண்டு நாட்களாக தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் மேலும் கூறியதாவது:
 
மேலடுக்கு சுழற்சி காரணமாகவே அதிக கனமழைதான் பெய்துள்ளது, ஆனால் அதே நேரத்தில் இது மேகவெடிப்பு அல்ல என்று கூறிய அவர், 90 செ.மீ மழை பெய்யும் என குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ரெட் அலர்ட் என்றால் 21 செ.மீ அளவுக்கு மேல், எவ்வளவு வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்று தான் அர்த்தம்,
 
மேலடுக்கு சுழற்சி காரணமாக இவ்வளவு மழை பெய்தது இதுவே முதன்முறை என்றும், 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடரும் என்றும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 94 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்