நேற்று தஞ்சையில் திமுக பிரமுகர் அன்பில் தர்மலிங்கம் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஸ்டாலின், உதயநிதி, டி.ஆர்.பாலு உள்பட பல திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியபோது, 'திமுகவினர்களின் குடும்ப விழாவில் என்னுடைய தலைமைப் பொறுப்பை யாராளும் தட்டிப்பறிக்க முடியாது’ என்றும் உரிய நேரம் வரும்போது உதயநிதிக்கு வாய்ப்பும், பதவியும் தானாகவே வந்து சேரும் என்றும் கூறினார்.