உதயநிதி ஒன்றும் கருணாநிதி கிடையாது.. கத்துக்குட்டி அவர்..! – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

ஞாயிறு, 24 டிசம்பர் 2023 (17:25 IST)
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.



தென் மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்ட பிரச்சினை குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதை விமர்சித்த தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “அவங்க அப்பன் வீட்டு காசையா கேட்டோம்?” என்ற ரீதியில் பேசியது நிதியமைச்சரை அவமதிக்கும் தோனியில் உள்ளதாக பாஜக பிரமுகர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய இணை அமைச்சரும் முன்னாள் தமிழக பாஜக தலைவருமான எல்.முருகன் “உதயநிதி ஒன்றும் கருணாநிதி கிடையாது. அரசியலில் அவர் ஒரு கத்துக்குட்டியாக இருக்கிறார். அவர் இன்னும் அரசியலில் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். பக்குவப்பட்ட ஒரு தலைவராக நடந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் “தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து பணி செய்யும்போது தமிழக அரசுக்குதான் நல்ல பலன் கிடைக்கும். அதை விடுத்து கேலி, கிண்டலோடு அவர் பேசி அமைச்சருக்கான தராதரத்தை குறைத்துக் கொண்டு விட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்