எனவே, முக ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றார். இவரது தலைமையிலான அமைச்சரவையில்,துரைமுருகன், அன்பில் மகேஷ், பிடிடி ஆர், சங்கரபாணி உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
ஆனால், திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதய நிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பேற்பாரா என்ற எதிர்பார்ப்பு திமுகவினரிடையே ஏற்பட்ட நிலையில், விரைவில் அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்ற தகவல் வெளியானது.
இந்த நிலையில், நாளை மறுநாள்( டிசம்பர் 14 ஆம் தேதி), கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், காலை 9:30 மணியளவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளதாகவும் இளைஞர் நலன் திட்ட செயலாக்கத்துறை அவருக்கு ஒதுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.