துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்கள் இடமாற்றம்

வெள்ளி, 8 ஜூன் 2018 (19:17 IST)
தூத்துகுடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் 100வது நாளில் வன்முறை வெடித்ததால் போலீசார் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த கொடூர சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த துப்பாக்கி சூடு இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தூத்துகுடியை சேர்ந்த இரண்டு வட்டாட்சியர்கள் தான் அனுமதி கொடுத்தனர் என்பது தெரிய வந்தது. 
 
இந்த நிலையில் வட்டாட்சியர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்கள் கண்ணன் மற்றும் சேகர் ஆகிய இருவரையும் இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
 
துணை வட்டாட்சியர் கண்ணன் கயத்தாறுக்கும், சேகர் ஸ்ரீவைகுண்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் இடமாற்றம் என்பது தண்டனையல்ல, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தூத்துகுடி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்