அண்ணா பல்கலைகழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

வியாழன், 26 மே 2022 (09:22 IST)
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னை ஐஐடியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல மாணவர்களுக்கு கொரோனா ஏற்பட்டதை அடுத்து அந்த வளாகத்தில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சையும் அளிக்கப்பட்டது
 
இந்த நிலையில் தற்போது நேற்று வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் 9 மாணவர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அண்ணா பல்கலையில் உள்ள அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்