கொரோனாவால் 12 பேர் இறந்துவிட்டார்கள் – வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரப்பியவர்கள் கைது !

சனி, 21 மார்ச் 2020 (11:05 IST)
சென்னையில் கம்பெனி லீவுக்காக வாட்ஸ் ஆப்பில் கொரோனா பற்றி வதந்தி பரப்பிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலால் இந்தியாவில் இதுவரை 203க்கும் மேற்பட்டோர் பாதிக்க பட்டுள்ளனர். இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பூந்தமல்லியில் ’கொரோனா வைரஸால் 12 பேர் இறந்துள்ளனர். அதனால் பொதுமக்கள் போராட்டம் நடத்த உள்ளனர்’ என சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. 12 பேர் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியானதால் பீதி உண்டானதை அடுத்து போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு அந்த வதந்தியைப் பரப்பியவர்களான காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பெஞ்ஜமின் மற்றும் சிவகுமார் ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் தங்கள் வேலை செய்யும் கார் கம்பெனியில் விடுமுறை அளிக்காததால் இப்படி செய்ததாக கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்