69 ஆண்டுகளாக காணாமல் போன சிலை மீட்பு..

Arun Prasath

ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (10:26 IST)
69 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிலைகள், தஞ்சை அரண்மனை கலைக் கூடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

தஞ்சை ராஜகோபால சுவாமி கோவிலில் இருந்து 69 ஆண்டுகளுக்கு முன் தஞ்சை அழகர் மற்றும் திருப்புராந்தகர் சிலைகள், காணாமல் போனதாக கூறப்பட்டது. இந்நிலையில் ராஜராஜ சோழன் சிலையுடன் காணாமல் போன 61 சிலைகளை மீட்கும் பணியில் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டனர்.

இதனையடுத்து இந்த சிலைகள் தஞ்சை அரண்மனை கலைக்கூடத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே தனது ஆய்வுகளை மேற்கொண்ட பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர், 56 கிலோ எடையுள்ள திருப்புராந்தகர் சிலையையும், 61 கிலோ எடையுள்ள தஞ்சை அழகர் சிலையையும் மீட்டனர். இதன் பின்பு கண்டுபிடித்த சிலைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு சொந்தமான கோவிலில் வைக்கப்படும் எனவும் பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்