கொரோனா நோயாளிகளுக்கு செலுத்த பயன்படும் ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நீண்ட வரிசையில் பொது மக்கள் காத்திருக்கின்றனர் என்பதும், தினமும் 300 பேர்களுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் வழங்கப்படும் என கூறப்பட்டு இருந்தாலும் கிட்டத்தட்ட 1000 பேர் வரை வரிசையில் காத்திருப்பதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது. ரெம்டெசிவிர் மருந்துக்கு இருக்கும் பற்றாக்குறையை பயன்படுத்தி ஒரு சிலர் இதை கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கு உள்ளதாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த மூன்று பேர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 2 ரெம்டெசிவிர் குப்பி மற்றும் ரூபாய் 80,000 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது