பழனி முருகன் கோயில் சிலை முறைகேடு: ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் அதிரடியில் இருவர் கைது

திங்கள், 14 மே 2018 (07:50 IST)
பழனி முருகன் கோவிலில் உள்ள மூலஸ்தானத்தில் இருந்த நவபாஷன சிலையை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக 200 கிலோ புதிய ஐம்பொன் சிலை ஒன்றை வைக்க தேவஸ்தானம் கடந்த 2004ஆம் ஆண்டு முடிவு செய்தது.
 
ஆனால் இந்த முடிவில் நவபாஷனை சிலையை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிடிருந்ததாக கூறப்பட்டது. அதேபோல் 200 கிலோ ஐம்பொன் சிலை செய்வதிலும் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
 
இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தற்போது அதிரடியாக இரண்டு பேர்களை கைது செய்துள்ளார். அவர்கள் பழனிமுருகன் கோவில் உதவி ஆணையராக இருந்த புகழேந்தி மற்றும், தங்கநகை சரிபார்ப்பு அதிகாரி தேவேந்திரன் ஆகியோர்கள் ஆவர்
 
ஏற்கனவே பழனி முருகன் திருக்கோயிலுக்கு ஐம்பொன் தங்கத்தால் உற்சவர் சிலை செய்ததில் பல கோடி மோசடி நடந்ததாக கூறப்பட்ட புகாரின் அடிபப்டையில் ஸ்தபதி முத்தையா மற்றும் ராஜாவை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யான பொன் மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர் என்பதும் அவர்கள் தற்பொழுது நிபந்தனை ஜாமீனில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்