கர்நாடகாவில் பாஜக வெற்றி? தமிழகத்திற்கு விடிவுகாலம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

சனி, 12 மே 2018 (12:33 IST)
கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் இன்று காலை பரபரப்புடன் தொடங்கியுள்ளது. மொத்தம் 224 தொகுகளில், 222 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. 
 
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கர்நாடகா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் தமிழகத்திற்கு விடிவுகாலம் கிடைக்கும் எனபது போல பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
அதாவது, கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்தால் தமிழக விவசாயிகளுக்கு நல்லது நடக்கும். பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே, காவிரி பிரச்சனை தீரும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
 
இதற்கு முன்னர், கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்தால் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று எச்.ராஜா பேட்டி அளித்து இருந்தார். 
 
அதேபோல் பொன்.ராதாகிருஷ்ணனும் காவிரி பிரச்சனை தீர வேண்டும் என்றால் கர்நாடகாவில் பாஜக வெற்றிபெற வேண்டும் என்று குறிப்பிட்டார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை காவிரி விவகாரத்தில் பாஜக அரசியல் உள்ளது என்பதை ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்