கள்ளக்குறிச்சி கலவரம்: தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் கைது
திங்கள், 18 ஜூலை 2022 (12:04 IST)
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே பிளஸ் டூ மாணவி திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து வன்முறையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பின் செயலாளர் மற்றும் தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கைது நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.