சென்னையில் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட விபத்து: 2 பேரை கைது செய்தது காவல்துறை..!

Siva

வெள்ளி, 29 மார்ச் 2024 (09:27 IST)
சென்னை நந்தனம் அருகே இயங்கிக் கொண்டிருந்த கேளிக்கை விடுதி என் சுவர் திடீரென விழுந்து இருவர் பணியாளர் நிலையில் இந்த விபத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 பேர்  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விபத்து மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக  ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது.

ஆனால் கேளிக்கை விடுதி அமைந்துள்ள பகுதியில் இருந்து 240 அடி தொலைவில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது என்றும்,  அதிர்வால் விபத்து நடைபெறவில்லை என்றும் மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்து உள்ள நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விடுதி உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது

ALSO READ: நிழல் உலக தாதா முக்தார் அன்சாரி விஷம் வைத்து கொல்லப்பட்டாரா? சிறையில் நடந்தது என்ன?

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்