நடிகை ராகினி திவேதிக்கு உதவ மாட்டோம்: பாஜக உறுதி

ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (20:40 IST)
தமிழ் மற்றும் கன்னட நடிகை ராகினி திவேதி சமீபத்தில் போதை பொருள் குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமின்றி அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து உள்ளதாக தெரிகிறது 
 
இந்த நிலையில் ராகினி திவேதி கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கர்நாடக மாநிலத்தின் பல இடங்களில் பிரச்சாரம் செய்ததாகவும் அதனால் அவர் பாஜக உறுப்பினர் என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது
 
ஆனால் இந்த செய்தியை பாஜக தலைமை மறுத்துள்ளது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது பல நட்சத்திரங்கள் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர். அந்த வகையில் ராகினி திவேதியும் ஒருவர் என்பதுதான் உண்மை
 
அவர் பாஜக உறுப்பினர் அல்ல. அவரை பிரச்சாரம் செய்யும்படி பாஜக கேட்டுக் கொள்ளவும் இல்லை எனவே அவருக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ராகினி திவேதியின் சொந்த மற்றும் தொழில் ரீதியான பிரச்சினைகளில் பாஜக தலையிடாது என்றும் அவரை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று உறுதிபடக் கூறியுள்ளார் 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்