வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு: தவெக முக்கிய அறிவிப்பு..!

Mahendran

செவ்வாய், 6 மே 2025 (13:04 IST)
மத்திய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய திருத்தச் சட்டம் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இந்தச் சட்டத்தின் அடிப்படையில், வக்பு வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் நியமிக்கக் கூடாது என கடந்த வாரம் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
 
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் இந்த வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு நேற்று  உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
 
இதுகுறித்து வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், "வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்களை நியமிப்பது, மற்றும் வக்பு சொத்துக்களின் வரம்புகளை மாற்றும் முயற்சிகளை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்ட விசாரணை மே 15 அன்று நடைபெறும்.
 
சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்கவும், அரசியலமைப்பை மதிக்கவும், தமிழக வெற்றி கழகம் உறுதியாக செயல்பட்டு வருகிறது. இந்த வழக்கில் நமது தரப்புக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் டாக்டர் அபிஷேக் மனு சிங்விக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்