வாயை விட்டு மாட்டிக் கொண்ட திவ்யதர்ஷினி : வறுத்தெடுத்த ரசிகர்கள்

வெள்ளி, 2 டிசம்பர் 2016 (12:51 IST)
சமீபகாலமாக மத்திய அரசு பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. ரூபாய் நோட்டில் தொடங்கி தங்க நகை, தியேட்டர்களில் சினிமா தொடங்குதற்கு முன் கண்டிப்பாக தேசிய கீதம் இயற்ற வேண்டும்.


 

 
அப்போது திரையரங்கில் இருப்பவர்கள் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். அப்போது திரையில் தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
 
இதற்கு சிலர் வரவேற்பு தெரிவித்தாலும், பெரும்பாலனோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படித்தான் தேசப்பற்றை காட்ட வேண்டுமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
இந்நிலையில், இந்த அறிவிப்பிற்கு தொலைக்காட்சி பிரபலமான திவ்யதர்ஷினி  தனது டிவிட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து அவரின் கருத்திற்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், தன்னுடைய கருத்திலிருந்து அவர் பின் வாங்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்