இந்த நிலையில் தனது மனைவி சொந்த வீட்டிலேயே திருடிய சம்பவம் அவரது கணவர் வின்செண்ட்டை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் இருந்த நகையை தானே எடுத்து வைத்துக்கொண்டு கொள்ளை போனதாக நாடகமாடி மனைவி கைதான சம்பவத்தால் மனமுடைந்த கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் அதனால் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
தாராளமாக செலவு செய்ய ஆசைப்பட்டு சொந்த வீட்டிலேயே திருடி போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜான்சிராணி, தற்போது கணவரையும் இழந்து போலீஸ் வழக்கையும் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளார். பேராசை காரணமாக அவருடைய நிலையை நினைத்து பரிதாப்படுவதா? ஆத்திரப்படுவதா? என்று தெரியவில்லை என அந்த பகுதி மக்கள் கூறி வருகின்றனர்,