உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னார் என்ற கிராமத்தில் வசித்து வருபவர், சஞ்சய் (32). இவர் இரவு உணவுக்கு வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது, சந்தைக்கு சென்று திரும்பிய மனைவி, கணவன் என்ன சமைக்கிறார் என்பதைப் பார்த்துள்ளார்.
பின்னர், தனது கணவர் சஞ்சய் தப்பிவிடாமல் இருப்பதற்காக வீட்டை வெளியில் செல்லாமல் இருக்கவே வெளியில் பூட்டி,வீட்டைவிட்டு வெளியே வந்த மனைவி அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று போலீஸில் புகார் அளித்துள்ளார்.
போலீஸார், சஞ்சயிடம் விசாரித்தபோது, அருகில் உள்ள கங்கை நதியில் இருந்து இறந்தவரின் கையை எடுத்துக்கொண்டு வந்து அதை சமைப்பதற்கு பயன்படுத்தியுள்ளார். இதனையடுத்து, மக்கள் அவரை அதிர்ச்சி அடைந்து சஞ்சயை கைது செய்தனர்.