கரூரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவிற்கு டிடிவி அணி சார்பில் சுக்காலியூர் ரவுண்டானா அருகே பேனர் வைத்திருந்தனர். அனுமதியின்றி பேனர் வைத்ததாக கூறி காவல்துறையினர் பேனரை அகற்றினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற டிடிவி அணியினர் பேனர் அகற்றத்திற்கு காரணம் என்ன? மாவட்டம் முழுவதும் எடப்பாடி அணி சார்பில் வைக்கப்பட்டிருக்கும் பேனருக்கு முறையாக அனுமதி பெற்றுள்ளதா? என விளக்கம் கேட்டு வாக்குவாதம் செய்தனர். பின்னர் அதே இடத்தில் பேனர் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேனர் மற்றும் பிளக்ஸ் ஆகியவற்றிற்கு மட்டுமே காவல்துறையினர் முதல் அனைத்து துறையினரும் சிறப்பு அனுமதி கொடுத்தது போலும், முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ வாக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சார்பிலும் டி.டி.வி தினகரன் சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் மற்றும் பேனர்களுக்கு தனிக்கவனம் செலுத்தி அகற்றுவதாகவும், குற்றம் சாட்டிய, டி.டி.வி தினகரன் அணியினர் ஒரு தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் அதுவும் அவருடைய ஆட்சி என்று கூறும், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியிலேயே அவரின் பிறந்த நாளுக்கு, அவரின் படம் வைத்த பேனர்களுக்கே அனுமதி இல்லையா ? என்று பொதுமக்களும், அ.தி.மு.க அம்மா அணியினரும் பெரும் மூச்சோடு கிளம்பி சென்றனர்.