ரிசார்ட்டில் கும்மாளம் போடும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் - ஜாலியோ ஜாலி

வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (11:28 IST)
பாண்டிச்சேரி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அங்கு உல்லாசமாக பொழுதை கழிக்கும் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.


 

 
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததை அடுத்து, அவர்களுக்கு எதிராக களம் இறங்கியுள்ளார் தினகரன். இதன் எதிரொலியாக, அவரை ஆதரிக்கும் 19 அதிமுக எம்.எல்.ஏக்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், அவருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் சமீபத்தில் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.


 

 
மேலும், தற்போது அந்த எம்.எல்.ஏக்கள் பாண்டிச்சேரியில் உள்ள விண்ட் பிளவர் ரிசார்ட் எனப்படும் உல்லாச விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  அங்கு அவர்களுக்கு வேண்டிய வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கடல் உணவு வகைகள், மசாஜ், நீச்சல் குளம்,விளையாட்டு என எம்.எல்.ஏக்களை குஷியாக  வைத்திருக்கிறது தினகரன் தரப்பு...


 

 
இந்நிலையில், அவர்கள் அங்கு குதூகலாமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் தங்க தமிழ் செல்வன் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் குழந்தைகள் போல் விளையாடும் புகைப்படங்களும் அடக்கம்..

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்