எம்.எல்.ஏக்கள் என்னை சந்திக்க வேண்டாம்; பின் வாங்கிய தினகரன் - பின்னணி என்ன?

வெள்ளி, 9 ஜூன் 2017 (14:29 IST)
எம்.எல்.ஏக்கள் உட்பட யாரும் தன்னை சந்திக்க வேண்டாம் என அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ள விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில், டெல்லி போலீசார் கைது செய்யப்பட்ட அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஜாமீனில் சமீபத்தில் வெளியே வந்தார். 
 
அதன் பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அணியிலிருந்த 32 எம்.எல்.ஏக்கள் தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணியை கலக்கத்தில் ஆழ்த்திருயிருப்பதோடு, ஆளும்  பாஜக அரசையும் கோபப்பட வைத்துள்ளது. 
 
எனவே, தினகரனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மத்திய அரசு ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ள இந்த சூழ்லையில் இது என்ன தனியாக அணி உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் பழைய வழக்குகளையெல்லாம் தூசி தட்ட வேண்டுமா? முதலில் டெல்லிக்கு வாருங்கள்.. உங்களிடம் பேச வேண்டும் என அழைத்துள்ளனர்.
 
எனவே, தற்போதைக்கு என்னை யாரும் சந்திக்க வேண்டாம் என அறிவித்து விட்டு நேற்று இரவே டெல்லிக்கு சென்றுவிட்டார் தினகரன்.

வெப்துனியாவைப் படிக்கவும்