ஆர்.கே.நகரில் 40707 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி...

ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (17:14 IST)
நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட  40, 707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.


 
ஆர்.கே.நகரில் கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆர்.கே.நகரில் உள்ள 2,28,234 வேட்பாளர்களில் 1,76,885 பேர் வாக்களித்தனர். அதாவது 77 சதவீத வாக்குகள் பதிவானது.  அதன் வாக்கு எண்ணிக்கை சென்னை இராணி கல்லூரியில் இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. 14 மேஜைகளில் மொத்தம் 19 சுற்றுகளாக இந்த வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.
 
அதில், முதல் சுற்று முதலே டிடிவி தினகரன் முன்னிலை வகித்து வந்தார். அதன்பின் வெளியான அனைத்து சுற்றுகளிலும் அவரே முன்னிலையில் இருந்தார். இந்நிலையில், தற்போது 19 சுற்றுகளும் முடிந்து இறுதி நிலவரப்படி, டிடிவி தினகரன் -  89, 013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 
 
மொத்தமாக பதிவான வாக்குகளில் தினகரன் 50.32 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். இந்த தேர்தல் மூலம், இடைத்தேர்தலில் ஆளும் கட்சியே வெற்றி  பெறும் என்ற நடைமுறையை தினகரன் பொய்யாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல்,

மதுசூதனன் (அதிமுக) - 48,306 ( 27.31 சதவீதம் )

 மருதுகணேஷ் (திமுக) - 24,581 ( 13.90 சதவீதம்)


கலைக்கோட்டுதயம் ( நாம் தமிழர்) - 3,802 (2.15 சதவீதம்)

நோட்டா - 2, 348 (1.33  சதவீதம்)

கரு.நாகராஜன் (பாஜக)-  1,368 (0.77 சதவீதம் )

வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில் நோட்டோவிற்கு கிடைத்த வாக்குகள் கூட பாஜகவிற்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்