நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து ஆஜரான வழக்கறிஞர்கள், தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர்.அதற்குப் பதிலளித்த தினகரன் தரப்பு ‘நாங்கள் அதிமுக வுக்கு சம்பந்தமே இல்லாத குக்கர் சின்னத்தை நாங்கள் கேட்கிறோம்.. அதனை அவர்கள் எதிர்க்க எந்த முகாந்திரமும் இல்லை’ எனப் பதிலளித்தனர்.
திருவாரூர் தேர்தல் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதால் குக்கர் சின்னத்தை ஒதுக்க கோரிய தினகரன் மனுவை தற்போது விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என எடப்பாடி தரப்பு வாதத்தை முன் வைத்தது. அதற்கு எதிர்வாதமாக ’ 19 தொகுதிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கபப்ட இருப்பதால் எங்கள் கட்சிக்கு நிரந்தரமாக குக்கர் சின்னததை ஒதுக்க வேண்டும்’ என டிடிவி தரப்புக் கேட்டுக்கொண்டது.