ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல நேரிட்டதால் அவரால் முதல்வராக முடியவில்லை. இதனையடுத்து அவரது ஆதரவாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார். இதன் பின்னர் கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார் சசிகலாவால் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட அவரது அக்கா மகன் டிடிவி தினகரன்.
இந்நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார் டிடிவி தினகரன். பணப்பட்டுவாடா காரணமாக இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து வருமான வரித்துறையும் ஆளும் கட்சி வட்டாரத்தில் தனது அதிரடியை காட்டி வருகிறது. இந்த சூழலில் சசிகலா ஓபிஎஸ்-ஸை ராஜினாமா செய்ய வைத்து முதல்வராக முயன்றது போல, தினகரனும் முதல்வர் பதவிக்கு முயன்று வருவதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே தினகரன் மீது அமைச்சர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், தற்போது அவர் முதல்வராக முயன்று வருவதால் அதிருப்தியில் உள்ள 5 அமைச்சர்கள் ஓபிஎஸ் அணிக்கு தாவ தயாராக உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.