மத்திய அரசு அமல்படுத்திய இந்த ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வர இன்னும் ஒரு வாரம் மட்டும் இருப்பதால் மக்கள் அனைவரும் ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு பின்னர் இயல்பு நிலை திரும்பிவிடும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். ஆனால், தற்போதைய நிலைமையை பார்த்தால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றே தெரிகிறது.
இந்நிலையில் அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரன், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தி பின்னர் தேவைப்பட்டால் ஊரடங்கை மேலும் சில வாரங்கள் நீடிக்கவேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அதோடு, மக்களுக்கு சேவையாற்றி வரும் அம்மா உணவகங்களை தமிழகம் முழுவதும் நடமாடும் வகையில் செயல்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனால் தற்போது டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறார்.