சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சென்னையை வந்தடையும் 8 வழி விரைவு சாலை அமைக்கப்பட உள்ளது.
இந்த சாலை அமைப்பதற்காக 8,000 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பலரும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டிடிவி தினகரன் இன்று செய்தியார்களை சந்தித்து பேசிய போது இது குறித்தும் பேசினார். அவர் கூரியது பின்வருமாறு, யாருக்காக இந்த சாலை. எல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செல்வதற்குதான் விளை நிலங்களை அழித்து சேலத்தில் 8 வழிச்சாலை போடப்படுகிறது.