சான்றிதழ்களுக்கான கட்டணங்களுக்கும் 18% ஜி.எஸ்.டி - கடுப்பான டிடிவி!

வியாழன், 25 நவம்பர் 2021 (18:55 IST)
மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களுக்கான கட்டணங்களுக்கும் 18% ஜி.எஸ்.டி. என்பது கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி டிவிட்டர் பதிவு. 

 
அண்ணா பல்கலைகழகம் மற்றும் அதன் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி சான்றிதழ் பெறும் போது 18% ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். 
 
அவர் கூறியதாவது, அண்ணா பல்கலைகழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரி மாணவர்கள் படிக்கும் போது எந்த சான்றிதழ் கேட்டாலும் அதற்கு ஜிஎஸ்டி வசூல் வசூலிக்கப்பட மாட்டாது. ஆனால் அதே நேரத்தில் படித்து முடித்து அவர்கள் வெளியே சென்ற பிறகு கேட்கும் சான்றிதழுக்கு மட்டுமே ஜிஎஸ்டி வசூல் செய்யப்படும். இது வருடத்திற்கு சுமார் 20,000 பேர்கள் இது போன்ற சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்கிறார்கள் அவ்வாறு கேட்பவர்களிடம் மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். 
இந்நிலையில் டி.டி.வி.தினகரன் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வகை சான்றிதழ்களுக்கான கட்டணங்களுக்கும் 18% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியது. 
 
இந்த உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழக அரசு முறைப்படி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மாணவர் சான்றிதழ்களுக்கான கட்டணத்திற்கு  ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்குப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்