டி.டி.எஃப். வாசனிடம் பறிமுதல் செய்யப்பட்ட கார் திரும்ப ஒப்படைக்க மனு: நீதிபதி அதிரடி உத்தரவு..!

Mahendran

வெள்ளி, 12 ஜூலை 2024 (11:31 IST)
யூடியூபர் டி.டி.எஃப். வாசனிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை மீண்டும் ஒப்படைக்கக் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இந்த மனுவை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தார்.
 
செல்போனில் பேசிய படி காரை ஓட்டிய விவகாரத்தில் டி.டி.எஃப். வாசனின் கார் சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. காவல்துறை பறிமுதல் செய்த காரை மீண்டும் ஒப்படைக்கக் கோரி டி.டி.எஃப். வாசனின் தாயார் சுஜாதா தாக்கல் செய்த மனு இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 
 
இந்த விசாரணையின்போது வாகனத்தை கொடுத்தால் மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட வாய்ப்பு என கூறிய நீதிபதி டி.டி.எஃப். வாசனின் தாயார் சுஜாதா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.
 
முன்னதாக  பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் சென்னை - பெங்களூரு சாலையில் சர்ச்சைக்குரிய வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளி வந்தார்.
 
அதன்பின்னர்  டிடிஎஃப் வாசன் சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துகுடிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது அவர் செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மதுரை மாநகர காவல் ஆயுதப்படை காவலர் அளித்த புகாரின் பேரில் டிடிஎப் வாசன் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளிவந்தார்.
 
இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட காரை தான் திரும்ப கேட்டு மனுதாக்கல் செய்த நிலையில் அந்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
 
Edited by Mahendran
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்