வீட்டில் விபச்சார தொழில் செய்த 68 வயது முதியவர் கைது.. கஸ்டமரே காட்டி கொடுத்த சம்பவம்..!

Mahendran

வியாழன், 11 ஜூலை 2024 (18:00 IST)
தூத்துக்குடியில் 68 வயது முதியவர் ஒருவர் வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்த நிலையில் அவரது வீட்டிற்கு அடிக்கடி வரும் கஷ்டமரே போலீசில் காட்டிக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் என்ற பகுதியில் வெளியூரிலிருந்து பெண்களை அழைத்து வந்து தன்னுடைய வீட்டிலேயே ராஜன் என்ற 68 வயது நபர் விபச்சாரம் செய்து கொண்டிருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அவர் பேருந்து நிலையத்தில் நின்று அவ்வப்போது கஸ்டமர்களை சந்தித்து ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்து வருவதாகவும் இதன் மூலம் பணம் சம்பாதித்து வந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் இசக்கி என்பவர் நின்று கொண்டிருந்த நிலையில் அவரை அணுகிய ராஜன் தன்னிடம் பெண்கள் இருப்பதாக கூறி ஆசை வார்த்தை காட்டியுள்ளார். இதனை அடுத்து அந்த நபர் அவரது வீட்டுக்கு சென்று விபச்சார தொழில் நடப்பதை உறுதி செய்த பின் போலீசில் புகார் அளித்ததாகவும் இதனை அடுத்து போலீசார் சோதனை செய்ததில் மூன்று பெண்கள் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்த விசாரணை நடந்த போது அந்த வீட்டிற்கு அடிக்கடி வரும் கஸ்டமர் ஒருவரே இந்த வீட்டில் பல நாட்களாக விபச்சாரம் நடப்பதை போலீசாரிடம் வாக்குமூலமாக கூறிய நிலையில் ராஜன் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்