திருச்சியிலிருந்து வியட்நாமுக்கு நேரடி விமான சேவை இயக்கப்பட உள்ளதை அடுத்து சுற்றுலா மற்றும் வர்த்தகம் மேம்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே திருச்சியில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, சார்ஜா, துபாய், கொழும்பு போன்ற நாடுகளுக்கு விமான சேவை இருந்து வருகிறது.
குறிப்பாக வியாட்நாமில் இருந்து செவ்வாய் , வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களிலும் திருச்சியில் இருந்து திங்கள் புதன் வெள்ளி ஆகிய மூன்று நாட்களிலும் நேரடி விமானம் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.